ஈரோடு பஸ் நிலையத்தில் நிழற்குடை அமைக்கும் பணி தொடங்கியது

நிழற்குடை அமைக்கும் பணி

Update: 2022-09-21 19:30 GMT

ஈரோடு பஸ் நிலையத்தில் பழைய கட்டிடங்கள் சிதிலமடைந்தன. இதனால் அங்குள்ள வணிக வளாகம் மற்றும் நிழற்குடைகளை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன. சத்திரோடு பகுதியில் உள்ள பழைய வணிக வளாக கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அங்கு கீழ்தளத்தில் வாகன நிறுத்தத்துடன் கூடிய புதிய வணிக வளாகம் கட்டும் பணி நடந்து வருகிறது. மேலும், பழனி, திருப்பூர், கோவை, ஊட்டி, மதுரை, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய ஊர்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்துமிடத்தின் நிழற்குடைகளும் இடித்து அகற்றப்பட்டன.

அங்கு புதிய நிழற்குடைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளன. இதையொட்டி இரும்பு தூண் கான்கிரீட் மூலமாக பொருத்தப்பட்டு, கம்பிகள் பொருத்தும் பணியும் நடந்து வருகிறது. இந்த பணிகள் காரணமாக மழையிலும், வெயிலிலும் ஒதுங்குவதற்கு இடமில்லாமல் பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்