ஏரல் பள்ளியில்மாணவர்களுக்கு திறனாய்வு பயிற்சி முகாம்

ஏரல் பள்ளியில் மாணவர்களுக்கு திறனாய்வு பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2023-08-18 18:45 GMT

ஏரல்:

ஸ்ரீவைகுண்டம் யூனியனிலுள்ள அனைத்து நடுநிலைப் பள்ளிகளில் 2023-2024-ம் கல்வியாண்டில் 8-ம் வகுப்பு தேசிய திறனாய்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி முகாம் ஏரல் தூய தெரசாள் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. பயிற்சி வகுப்பை தூத்துக்குடி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ரமா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சார்லஸ் கிறிஸ்டோபர் வரவேற்று பேசினார். வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஜெயபாலன், துரைராஜ், தேவாசீர், பாலசுந்தரி ஆகியோர் மாணவர்கள் வெற்றிபெற ஆலோசனை வழங்கி, வாழ்த்தி பேசினா். ஓய்வு பெற்ற வட்டாரக்கல்வி அலுவலர் நம்பிதுரை பயிற்சி அளித்தார். பயிற்சி முகாமில் 22 நடுநிலைப்பள்ளிகளை சார்ந்த 147 மாணவ - மாணவியர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்