குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2023-07-25 18:45 GMT

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

மெயின் அருவி

குற்றாலத்தில் தற்போது சீசன் நன்றாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மதியம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். பின்னர் இரவு சுமார் 10 மணிக்கு வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

உற்சாக குளியல்

நேற்று காலையில் மெயின் அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுமார் ஒரு மணி நேரம் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து காலை 6 மணிக்கு ஆண்கள் மட்டும் அருவியின் ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் காலை சுமார் 11-30 மணிக்கு பெண்கள் குளிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து மெயின் அருவியில் ஆண்களும், பெண்களும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

சாரல் மழை

குற்றாலத்தில் நேற்று சாரல் மழை விட்டு விட்டு தூறியது. இடையிடையே லேசான வெயிலும் அடித்தது. குளிர்ந்த காற்று வீசியது.

அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்