கிறிஸ்தியாநகரம் பள்ளியில்112 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்:அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

கிறிஸ்தியாநகரம் பள்ளியில் 112 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

Update: 2023-08-02 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி கிறிஸ்தியாநகரம் டி.டி.டி.ஏ. மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு 112 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்சியில்திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன், தாசில்தார் வாமனன், உடன்குடி யூனியன் தலைவர் டி.பி.பாலசிங், துணைத்தலைவி மீராசிராஜூதீன், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ, செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளித் தலைமையாசிரியர் விங்ஸ்டன் வரவேற்றார். இதில் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலர் உமரிசங்கர், இளைஞரணி ராமஜெயம், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஜெசிபொன்ராணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்