பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2¼ கோடிக்கு பருத்தி ஏலம்

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.2¼ கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

Update: 2023-07-28 21:40 GMT

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.இந்த ஏலத்துக்கு கொங்கணாபுரம், தேவூர், கோனேரிப்பட்டி, எடப்பாடி, மேட்டூர், கொளத்தூர், அந்தியூர், பவானி, சித்தார், அம்மாபேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 8 ஆயிரத்து 724 மூட்டைகளில் பி.டி. ரக பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஏலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் முன்னிலையில் நடந்தது.

இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 989-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 722-க்கும் என மொத்தம் ரூ.2 கோடியே 16 லட்சத்து 6 ஆயிரத்து 743-க்கு ஏலம் போனது.

Tags:    

மேலும் செய்திகள்