ஆத்தூர் சோமநாதசுவாமிகோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி
ஆத்தூர் சோமநாதசுவாமிகோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆறுமுகநேரி:
ஆத்தூர் சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நடந்து வந்தது. சஷ்டி நாட்களில் காலையில் சிறப்பு பூஜையும், மாலையில் சுவாமி பிரகார வீதி உலாவும் நடைபெற்றது. நேற்று காலையில் வள்ளி அம்பாள், தெய்வானை அம்பாள் சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் உச்சிக்கால தீபாராதனை நடைபெற்றது.
மாலை 3.30 மணியளவில் சோமசுந்தரி அம்பாளிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலை 4 மணிக்கு சூரசம்ஹரத்திற்காக ஆத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி முன்புள்ள இடத்துக்கு சுவாமி புறப்படும் நடந்தது. அங்கு சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தேறியது.
நிகழ்ச்சியில் தாரகாசூரன், சிங்கமுகசூரன், சூரபதுமர், ஆகிய வடிவங்களில் வந்து அசுரர்களை பக்தர்களின் அரோகரா கோஷங்களுக்கு மத்தியில் சுப்பிரமணிய சுவாமி வதம் செய்தார். பின்னர் சூரபதுமரை சுவாமி ஆட்கொள்ளும் நிகழ்வும், வேல் அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் சுப்பிரமணிய சுவாமி மயூர வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் ெசய்தனர்.