தமிழகத்தில் எந்த காலத்திலும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க முடியாது

தமிழகத்தில் எந்த காலத்திலும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க முடியாது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.

Update: 2022-08-14 17:31 GMT

தமிழகத்தில் எந்த காலத்திலும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க முடியாது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.

திருப்பத்தூரில் மாவட்ட திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:-

பீகார் நிலைமை கர்நாடகாவிலும் ஏற்படும்

மத்திய அரசு கல்வியை மாநில பட்டியலில் இருந்ததை கொரோனா காலத்தில் யாருக்கும் தெரியாமல் பாராளுமன்றத்தில் பொதுப் பட்டியலுக்கு மாற்றியது. மாநில அரசு கல்வி மெட்ரிகுலேஷன் என்றும், மத்திய அரசு கல்வி சி.பி.எஸ்.இ. என்றும் இருக்கிறது. தற்போது மத்திய அரசு ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே தேர்வு என கூறி வருகிறது. இப்படி கூறுவது அனியாயமாகும்.

நீட் தேர்வை வைத்து மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைத்து வருகிறது. இதற்காக போராடும் ஒரே இயக்கம் திராவிட கழகம் தான். தற்போது பீகாரில் நிதிஷ்குமார் கட்சி பாரதிய ஜனதாவிற்கு நல்ல பாடம் புகட்டி உள்ளது. தொடர்ந்து கர்நாடகாவில் இதே நிலைமை ஏற்படும். தமிழக அரசு திராவிட மாடல் இந்தியா முழுவதும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆட்சி அமைக்க முடியாது

தமிழகத்தில் பா.ஜ.க. எந்த காலத்திலும் ஆட்சி அமைக்க முடியாது. தாமரை தமிழகத்தில் மலராது. தமிழகத்தில் தி.மு.க. திராவிட மாடல் ஆட்சி அனைத்து சாதனைகளையும் செய்து வருகிறது. பெண்களுக்கு இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தந்துள்ளது.‌ தற்போது தமிழக அரசு கஞ்சா குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்து இளைஞர்கள் நலனை காக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன், மாவட்ட இணைச்செயலாளர் கலைவாணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்