அந்தியூர் சந்தையில் ரூ.3 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை
அந்தியூர் சந்தையில் ரூ.3 லட்சத்துக்கு வெற்றிலை விற்பனையானது.
அந்தியூர்
அந்தியூர் வாரச்சந்தையில் வெற்றிலை விற்பனை நடைபெற்றது. இந்த சந்தைக்கு அந்தியூர், சந்தியபாளையம், காட்டுப்பாளையம், வெள்ளையம்பாளையம், வேம்பத்தி, வெள்ளாளபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய வெற்றிலைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஒரு வெற்றிலை கட்டில் 100 வெற்றிலைகள் இருக்கும்,
இதில் ராசி வெற்றிலை கட்டு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.80-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.120-க்கும், பீடா வெற்றிலை ரூ.40-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.80-க்கும், செங்காம்பு வெற்றிலை கட்டு ஒன்று ரூ.18-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெற்றிலை மொத்தம் ரூ.3 லட்சத்துக்கு விற்பனை ஆனது. ஈரோடு, திருப்பூர், பெருந்துறை, பொள்ளாச்சி, கோவை, தர்மபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இ்ங்கு வந்து வெற்றிலைகளை வாங்கி சென்றனர்.