அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.3 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.3 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் போனது.

Update: 2022-10-28 22:21 GMT

அந்தியூர்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 158 மூட்டைகளில் நிலக்கடலையை விற்பனைக்காக கொண்டுவந்திருந்தனர். இதில் நிலக்கடலை (பச்சை) குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 716-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.3 ஆயிரத்து 656-க்கும் விற்பனை ஆனது. நிலக்கடலை (காய்ந்தது) குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து ‌436-க்கும் அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 306-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நிலக்கடலை மொத்தம் ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது. கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் தர்மபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து ஏலத்தில் கலந்து கொண்டு நிலக்கடலையை வாங்கி சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்