அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.19¼ லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.19¼ லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது

Update: 2023-10-18 21:04 GMT

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு 1,054 மூட்டைகளில் பருத்தியை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.6 ஆயிரத்து 35-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 29-க்கும் என மொத்தம் ரூ.19 லட்சத்து 16 ஆயிரத்து 34-க்கு ஏலம் போனது. 3 ஆயிரத்து 433 தேங்காய்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.19.01-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.24.51-க்கும் என மொத்தம் ரூ.49 ஆயிரத்து 317-க்கு விற்பனை ஆனது. கொப்பரை தேங்காய் 117 மூட்டைகளில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 209-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 789-க்கும் என மொத்தம் ரூ.3 லட்சத்து 26 ஆயிரத்து 611-க்கு விற்கப்பட்டது. மக்காச்சோளம் 4 மூட்டைகளில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இது மொத்தம் ரூ.7 ஆயிரத்து 345-க்கு விற்பனை ஆனது. ஈரோடு, கோபி, பெருந்துறை, பொள்ளாச்சி, திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து விவசாய விளைபொருட்களை வாங்கி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்