சோலார் மின்உற்பத்தி நிலையத்தில் தாமிர கம்பி திருட்டு; 4 பேர் கைது

சோலார் மின்உற்பத்தி நிலையத்தில் தாமிர கம்பி திருடிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-26 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் தாலுகா பசுவந்தனை முள்ளுபட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான சோலார் மின் நிலையத்தில் கடந்த 23-ந்தேதி தாமிர கம்பிகள் திருட்டு போனது. இதுகுறித்து பசுவந்தனை போலீசார் வழக்குப்பதிவு செய்து க்ீழமுடிமன் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் பாலமுருகன் (வயது 27) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கீழமுடிமன் மயில்வாகனம் மகன் அழகுசுந்தரராஜ் (23), மேலமங்கலம் சுப்பையா மகன் செல்வகணேசன் (22), கீழமங்கலம் கணேசன் மகன் மூர்த்தி (20) ஆகியோருடன் சேர்ந்து சோலார் மின் நிலையத்தில் தாமிர கம்பிகளை திருடி இருப்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் தாமிர கம்பிகளை உருக்கி தூத்துக்குடியில் உள்ள இரும்பு கடையில் விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.28 ஆயிரத்து 800 மதிப்பிலான தாமிர கம்பி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்