மேட்டூர் அருகே மக்கள் சந்திப்பு முகாமில்393 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்கலெக்டர் கார்மேகம் வழங்கினார்

மேட்டூர் அருகே கருங்கல்லூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு முகாமில் 393 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

Update: 2023-01-31 19:58 GMT

கொளத்தூர்,

மக்கள் சந்திப்பு முகாம்

மேட்டூர் தாலுகா கருங்கல்லூர் கிராமத்தில் மக்கள் சந்திப்பு முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். சதாசிவம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கருங்கல்லூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் முகாமில் பெறப்பட்ட கோரிக்கைகள் மீது அதன் சாத்தியக்கூறுகள் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலை துறை, சமூக நலத்துறை, கூட்டுறவு துறை உள்ளிட்ட பல துறைகளின் சார்பில் இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, இலவச சலவைப்பெட்டி, ஊட்டச்சத்து பெட்டகம் என ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை 393 பயனாளிகளுக்கு கலெக்டர் கார்மேகம் வழங்கினார். அப்போது அவர்களிடம் இந்த உதவிகளை தங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும் கலெக்டர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, மேட்டூர் உதவி கலெக்டர் தணிகாசலம், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ரவிக்குமார், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சிங்காரம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன், மேட்டூர் தாசில்தார் முத்துராஜா, கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சரவணகுமார், துணைத்தலைவர் மாரப்பன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், கருங்கல்லூர் ஊராட்சி தலைவர் பழனி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்