ஓமலூர் போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம்
ஓமலூர் போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவி காதலனுடன் தஞ்சம் அடைந்தார்.
ஓமலூர்
ஓமலூரை அடுத்த திமிரிகோட்டையை சேர்ந்தவர் மோகனப்பிரியா (வயது 19). இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவரும், திண்டமங்கலத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் கோகுலும் (22) கடந்த 6 மாதங்களாக காதலித்து வந்தனர். இது மோகனப்பிரியாவின் பெற்றோருக்கு தெரிந்ததால், வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காதல் ஜோடியினர் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் நாமக்கல்லில் உள்ள ஒரு முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் நேற்று கல்லூரி மாணவி மோகனப்பிரியா, தனது காதல் கணவர் கோகுலுடன் ஓமலூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோரையும் அழைத்து பேசி, சமாதானப்படுத்தினர்.