தென்காசியில் ஜோதிட பட்டமளிப்பு விழா
தென்காசியில் ஜோதிட பட்டமளிப்பு விழா நடந்தது.
தென்காசி திருவள்ளுவர் கல்வியியல் அறக்கட்டளை சார்பில் ஜோதிட பட்டமளிப்பு விழா, அறக்கட்டளை 15-ம் ஆண்டு தொடக்க விழா, வேத மந்திர பாடசாலை ஆரம்ப விழா ஆகிய முப்பெரும் விழா தென்காசி மேலகரம் சமுதாய நலக் கூடத்தில் நேற்று நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவன தலைவர் ஜி.மாடசாமி ஜோதிடர் தலைமை தாங்கினார். முதுநிலை பட்டதாரி ஆசிரியை ரஞ்சினி, சாவித்திரி, வனஜா, சுதந்திரா தேவி, ராஜாத்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். ஜி. சுடலையாண்டி இறை வணக்கம் பாடினார். விழா குழு தலைவர் தாமோதரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கேரள மகம் திருநாள் பந்தள மன்னர் வர்மாராஜா கலந்துகொண்டு ஜோதிட பட்டம் பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
விழாவில் தென் மாவட்ட திருவள்ளுவர் குல முன்னேற்ற நலச் சங்க தலைவர் ஆனந்தன், சென்னை கதிர் விசுவலிங்கம், முன்னாள் தோட்டக்கலைத்துறை கூடுதல் இயக்குனர் முத்துசாமி, முன்னாள் மருத்துவத்துறை இணை இயக்குனர் தேவராஜ், தென் மாவட்ட இளைஞரணி தலைவர் ரங்கதுரை மாணிக்கம், கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விழா குழு செயலாளர் தூத்துக்குடி ராம முருகன் நன்றி கூறினார்.