ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டம்
ஊராட்சி செயலாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நயினார்கோவில்,
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாநில அளவில் நடைபெறும் தர்ணா போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் ஊராட்சி சங்க ஒன்றிய தலைவர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர் விஜயன், ஒன்றிய பொருளாளர் மாரி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அமைப்பு செயலாளர் முனியசாமி மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், பம்பு இயக்குபவர்கள், கணினி இயக்குனர் உள்ளிடோர் கலந்துகொண்டு 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.