கலை இலக்கிய சங்க கூட்டம்

தமிழ்நாடு கலை இலக்கிய சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது.

Update: 2023-01-28 18:45 GMT


தமிழ்நாடு கலை இலக்கிய சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மாவட்ட தலைவர் சரோஜினி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் செல்வகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கோ முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் ரத்தினம் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்ட செயலாளர் குணசேகரன், மாநில பொது செயலாளர் சங்கர சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

மாவட்ட நிர்வாகம் இணைந்து சிவகங்கையில் நடத்தும் புத்தக திருவிழாவை சிறப்பாக நடத்தும் மாவட்ட கலெக்டரை பாராட்டுவதோடு, புத்தக திருவிழா குறித்து துண்டுபிரசுரம், சுவரொட்டி மூலம் பொதுமக்கள் மத்தியில் நமது அமைப்பின் சார்பில் தெரியப்படுத்துவது, வருகிற 1-ந் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள நமது உறுப்பினர்கள் தாரை, தப்பட்டைகளுடன் பேரணியாக சென்று புத்தகங்கள் வாங்குவது எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. வட்ட பொருளாளர் ரத்தினம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்