சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆய்வு

கலவை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-08-11 13:06 GMT

கலவை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் லட்சுமணன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது மாதத்தில் எத்தனை பிரசவம் நடக்கிறது என்பது குறித்து கேட்டறிந்து,வெளி நோயாளிக்கு தேவையான இருக்கை வசதி செய்ய வேண்டும் என்றும், மருத்துவமனையை சுற்றி உள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்று மருத்துவரிடம் கூறினார்.

வெளி நோயாளிடம் அவர்களுக்கு அளிக்கும் சிகிச்சை முறை குறித்தும் கேட்டு அறிந்தார். அரசு மருத்துவ அதிகாரி சதீஷ்குமார், செவிலியர் சந்தோஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்