காலபைரவர் தேய்பிறை அஷ்டமி பூஜை
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் பாலசவுந்திரவல்லி உடனமர்
ஜெயங்கொண்டேஸ்வரர் கோவிலில் நாட்டில் நல்ல மழை பெய்ய வேண்டியும், தொழில் வளம் சிறக்கவும், திருமண தடை நீங்கவும், மக்கள் நோயற்ற வாழ்வு வாழவும் மார்கழி மாத தேய்பிறை காலபைரவர் அஷ்டமி சிறப்பு பூஜை நேற்று இரவு நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு நேற்று இரவு 7 மணிக்கு மங்கள இசையுடன் விழா தொடங்கப்பட்டு கால பைரவருக்கு வேள்வியுடன் மகா சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இரவு 8 மணிக்கு கால பைரவர், ஜெயங்கொண்டேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர். இளநீர், பஞ்சாமிர்தம். திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்துடன் மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது.
பக்தர்களுக்்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கால பைரவர் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.
---