விருத்தாசலம்துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு

விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்றுக்கொண்டாா்.

Update: 2023-02-05 18:45 GMT


விருத்தாசலம், 

விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த அங்கித்ஜெயின் சென்னை மண்டல பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று சென்றார். அதைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ஆரோக்கியராஜ் விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டாக துணை போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விருத்தாசலம் முருகேசன், மங்கலம்பேட்டை ராமதாஸ், பெண்ணாடம் குமார் மற்றும் மங்கலம்பேட்டை, கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி, ஆலடி, பெண்ணாடம் உள்ளிட்ட அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.


புதிதாக பொறுப்பேற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் நிருபர்களிடம் கூறுகையில், விருத்தாசலம் உட்கோட்ட காவல் சரகத்தில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க 24 மணி நேரமும் ரோந்துப்பணி மேற்கொள்ளப்படும். இதுதவிர குற்ற சம்பவங்களை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுப்பதோடு, தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். பொதுமக்கள் போலீஸ் நிலையங்களில் கொடுக்கும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி தீர்வு காணப்படும். பொதுமக்கள் என்னை நேரில் அணுகியும் புகார் தெரிவிக்கலாம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்