பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு

நடுவட்டம், தேவர்சோலையில் நடந்த தடுப்பூசி முகாம்களை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2022-09-11 15:03 GMT

கூடலூர், 

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சியில் 8 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது. தேவர்சோலை சமுதாய கூடத்தில் நடந்த முகாமை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராஹிம் ஷா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பேரூராட்சி மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். பொது இடங்களில் முககவசம் அணிய வேண்டும் என முகாமில் கலந்துகொண்ட மக்களுக்கு அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) பிரதீப் குமார் உள்பட சுகாதாரப் பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து நடுவட்டம் பேரூராட்சியில் 5 இடங்களில் நடைபெற்ற முகாம்களை பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராஹிம் ஷா பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது பேரூராட்சி செயல் அலுவலர் பிரதீப் குமார் உள்பட பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நாகர்தனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் இப்ராஹிம் ஷா நேரில் ஆய்வு செய்தார்.


Tags:    

மேலும் செய்திகள்