பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு

பென்னாத்தூரில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2023-10-19 18:31 GMT

பென்னாத்தூர் பேரூராட்சியில், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் செ.கணேஷ் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது கணேசபுரத்தில் அம்ருத் திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்பட்ட குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.

பின்னர் அலுவலகப்பணிகள், திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் தற்போதய நிலை, வரி இனங்களின் வசூல் விவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் வரி வசூல் பணியினை தீவிரப்படுத்தி நிலுவையின்றி வசூலிக்க வேண்டும். திட்டப் பணிகளை உரிய கால அளவிற்குள் தரமாக செய்து முடித்திட உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது பென்னாத்தூர் பேரூராட்சி தலைவர் ச.பவானிசசிகுமார், செயல் அலுவலர் கி.அர்ச்சுணன், அலுவலக பணியாளர் திருமால் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்