போலீஸ் உதவி கமிஷனர், துணை சூப்பிரண்டு இடமாற்றம்
நெல்லை போலீஸ் உதவி கமிஷனர், தென்காசி துணை சூப்பிரண்டு இடமாற்றம் செய்யப்பட்டனர்.;
நெல்லை மாநகர போலீஸ் நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனர் நாகசங்கர், தென்காசி மாவட்டத்திற்கு துணை சூப்பிரண்டாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக தென்காசி துணை சூப்பிரண்டு மணிமாறன் நெல்லை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவு காவல் துறை தலைமையிடம் சார்பில் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.