காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் உதவி கலெக்டர் ஆய்வு

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் உதவி கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2023-07-26 20:12 GMT

விக்கிரமசிங்கபுரம்:

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு வருகிற 6-ந் தேதி கால்நாட்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் நேற்று கோவில் திருவிழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார், அம்பை தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை கோட்ட துணை இயக்குனர் செண்பக பிரியா உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

திருவிழாவை முன்னிட்டு வருகிற 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு தனியார் வாகனங்களில் செல்ல அனுமதியில்லை. மாறாக அரசு பஸ்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செல்ல முடியும். மேலும் கோவில் பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் பக்தர்கள் யாரும் கடைகள் அமைக்க அனுமதியில்லை, கோவிலுக்கு ஷாம்பு, சோப்பு, மதுபானங்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்லக்கூடாது, பக்தர்கள், சிறுவர்கள் ஆற்றில் ஆழமான பகுதியில் சென்று குளிக்கக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்ககூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்