19 துணை தாசில்தார்கள் பதவி உயர்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 துணை தாசில்தார்கள் தாசில்தார்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.;
ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 துணை தாசில்தார்கள் தாசில்தார்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
பணி நியமனம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பதவி உயர்வு பெற்றுள்ள துணை தாசில்தார்களுக்கு தாசில்தாராக பணி நியமனம் செய்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ராமநாதபுரம் தாலுகா அலுவலக துணை தாசில்தார் ரவி நாகபட்டினம்-தூத்துக்குடி நான்குவழிச்சாலை அலகு-2 நில எடுப்பு தனி தாசில்தாராகவும், தலைமையிட துணை தாசில்தார் சேகுஜலாலுதீன் ஆர்.எஸ்.மங்கலம் நில எடுப்பு தனி தாசில்தாராகவும், மாவட்ட வழங்கல் அலுவலக பறக்கும்படை துணை தாசில்தார் ரெத்தினமூர்த்தி நாகபட்டினம்-தூத்துக்குடி நான்குவழிச்சாலை தனி தாசில்தாராகவும், திருவாடானை துணை தாசில்தார் கார்த்திகேயன் ஆர்.எஸ்.மங்கலம் சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், கீழக்கரை மண்டல துணை தாசில்தார் பழனிக்குமார் ராமநாதபுரம் கேபிள்டிவி தாசில்தாராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தலைமை உதவியாளர்
கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் நடராஜன் மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், மாவட்ட வழங்கல் அலுவலக தலைமை உதவியாளர் உமாராணி கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவு தனிதாசில்தாராகவும், கடலாடி வட்ட வழங்கல் அலுவலர் ரெங்கராஜ் கடலாடி நான்குவழிச்சாலை நில எடுப்பு தனி தாசில்தாராகவும், ராமேசுவரம் தேர்தல் துணை தாசில்தார் ஸ்ரீதரன் தொண்டி நில எடுப்பு தனிதாசில்தாராகவும், கடலாடி மண்டல துணை தாசில்தார் தென்னரசு முதுகுளத்தூர் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும், ராமநாதபுரம் கனிமம் துணை தாசில்தார் செல்லப்பா ராமநாதபுரம் ஆதிதிராவிடர் நல தாசில்தாராகவும், ராமநாதபுரம் மண்டல துணை தாசில்தார் சடையாண்டி பரமக்குடி ஆதிதிராவிடர் நல தாசில்தாராகவும், ஆர்.எஸ்.மங்கலம் மண்டல துணை தாசில்தார் சுவாமிநாதன் நாகபட்டினம்-தூத்துக்குடி நான்குவழிச்சாலை அலகு-3 நில எடுப்பு தாசில்தாராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வரவேற்பு பிரிவு துணை தாசில்தார் பாலகிருஷ்ணன் ராமேசுவரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், ராமநாதபுரம் தேர்தல் துணை தாசில்தார் வரதன் பரமக்குடி நகர நிலவரித்திட்ட தனிதாசில்தாராகவும், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் சரவணன் நாகபட்டினம்-தூத்துக்குடி நான்குவழிச்சாலை திருவாடானை நில எடுப்பு தனிதாசில்தாராகவும், ராமநாதபுரம் ஆதிதிராவிடர் நல தனிதாசில்தார் சண்முகசுந்தர் ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனிதாசில்தாராகவும், ராமநாதபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முருகேசன் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக நேர்முக உதவியாளராகவும், பரமக்குடி ஆதிதிராவிட நல தனிதாசில்தார் சாந்தி நாகபட்டினம் தூத்துக்குடி நான்குவழிச்சாலை அலகு-4 தனி தாசில்தாராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.