அனைத்து சமுதாயத்தினரின் சாதி வாரி கணக்கெடுப்புக்கு சட்டசபையில் தீர்மானம்

அனைத்து சமுதாயத்தினருக்கும் முறையான நிபுணர்களைக்கொண்டு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என விடுதலைக்களம் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-04-30 20:46 GMT


அனைத்து சமுதாயத்தினருக்கும் முறையான நிபுணர்களைக்கொண்டு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என விடுதலைக்களம் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயல்வீரர்கள் கூட்டம்

விடுதலைக்களம் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் விருதுநகரில் மாவட்ட செயலாளர் அருண்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் நிறுவன தலைவர் நாகராஜன், மாவட்ட செயலாளர்கள் திருச்சி கண்ணன், நாமக்கல் துரை சரவணன், கரூர் முருகேசன், மாநில இளைஞரணி செயலாளர் சசிகுமார், மாவட்ட இளைஞரணி செயலாளர்கள் நாமக்கல் பெரியூர் பூபதி, கரூர் ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒரிசா, பீகார் போன்ற மாநிலங்களை போல் தமிழகத்திலும் அனைத்து சமுதாயத்தினருக்கும் முறையான நிபுணர்களை கொண்டு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

கணக்கெடுப்பு

சீர்மரபினர் மக்களுக்கு ஒரே டி.என்.டி. சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி எந்த ஒரு சாதியினருக்கும் உள்ஒதுக்கீடு வழங்க கூடாது.

மத்திய அரசின் அதிகாரமளித்தல் துறை உத்தரவிட்டபடி டி.என்.டி. மக்களின் புள்ளிவிவர கணக்கெடுப்புக்கு அதிகாரி நியமிக்க வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கூட்டத்திற்கு வந்திருந்தோரை கட்சி ஆலோசகர் ராதா கிருஷ்ணன் வரவேற்றார்.

Tags:    

மேலும் செய்திகள்