பேரவை கூட்டம்
வாய்மேடு அருகே தேசிய மாதர் சம்மேளன ஒன்றிய பேரவை கூட்டம் நடந்தது.
பஞ்சநதிக்குளம் மேற்கில் தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் வேதாரண்யம் ஒன்றிய பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ரேணுகா தலைமை தாங்கினார். தகட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி வரவேற்றார். மாவட்ட செயலாளர் மேகலா, ஒன்றிய செயலாளர் ஜெயா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கடந்த 2 மாத காலமாக 100 நாள் வேலை செய்த பணியாளர்களுக்கு சம்பளம் தராததை கண்டித்தும், உடனடியாக சம்பளத்தை கொடுக்க வலியுறுத்தியும் வருகிற 29-ந்தேதி வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், ஒன்றிய செயலாளர் பாலகுரு, பொருளாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை நன்றி கூறினார்.