தொகுப்பு வீடுகளை விரைவில் கட்ட வேண்டும்

தொகுப்பு வீடுகளை விரைவில் கட்ட வேண்டும் என ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.;

Update: 2023-01-23 18:45 GMT

பந்தலூர், 

பந்தலூர் தாலுகா பாட்டவயல் அருகே கொட்டாடு, முக்குபாடி ஆதிவாசி காலனியில் ஏராளமான ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் குடிசை வீடுகள், பழுதடைந்த வீடுகளில் வசித்து வந்தனர். இதையடுத்து தொகுப்பு வீடுகள் கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய தொகுப்பு வீடுகள் கட்டும் பணி தொடங்கியது. தொடர்ந்து பணிகள் நடந்து வந்த நிலையில், வீடுகள் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஆதிவாசி மக்கள் குடிசைகளில் வசித்து வருகின்றனர். பழுதடைந்த வீடுகளில் மழை காலங்களில் மழைநீர் ஒழுகுகிறது. இதனால் அவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே, கூடுதல் நிதி ஒதுக்கி தொகுப்பு வீடுகள் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்