நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாம்; ஜெயக்குமார் பேட்டி
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,
ராயப்பேட்டையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்குபேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரலாம். அது வேற விசயம். தேர்தல் ஆணைய அட்டவணையின்படி 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும் போது மகத்தான வெற்றியை அ.தி.மு.க. பெறும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி தமிழ்நாட்டில் மலரும்" என்றார்.
அப்போது அவரிடம், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஒற்றுமையாக செயல்பட உறுதி ஏற்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்லி இருக்கிறாரே? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ' அவரிடம்(ஓ.பன்னீர்செல்வம்) இருக்கும் 4 பேருக்காகத்தான்(எம்.எல்.ஏ.க்கள்) அவர் இதை சொல்கிறார். ஏனென்றால் அவர்களும் அவரைவிட்டு போய் விடக் கூடாது.' என்று பதிலளித்தார்.