சட்டசபை உறுதி மொழிக்குழு மதுரையில் இன்று ஆய்வு

சட்டசபை உறுதி மொழிக்குழு மதுரையில் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்

Update: 2023-05-29 20:56 GMT


தமிழ்நாடு சட்டசபையில் உறுதி மொழிக்குழு, பன்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை(பட்டுக்கோட்டை), அருள் (சேலம் மேற்கு), கருணாநிதி (பல்லாவரம்), சக்கரபாணி (வானூர்), பழனியாண்டி (ஸ்ரீரங்கம்), மணி (ஓமலூர்), மனோகரன் (நாங்குனேரி), மோகன் (அண்ணா நகர்), ராமலிங்கம் (நாமக்கல்), விஸ்வநாதன் (ஆம்பூர்), ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த உறுதிமொழி குழுவினர், மதுரை மாவட்டத்தில் அரசுத்துறைகளின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து இன்று(செவ்வாய்க்கிழமை) ஆய்வு செய்ய உள்ளனர். இதனைத்தொடர்ந்து மாலையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கலெக்டர் சங்கீதா மற்றும் மதுரை மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்