மோட்டார் சைக்கிளை வழிமறித்து வாலிபர்கள் மீது தாக்குதல்

முத்துப்பேட்டையில் மோட்டார் சைக்கிளை வழிமறித்து வாலிபர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-08-30 18:45 GMT

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பழைய நம்மங்குறிச்சி சாலையில் ஒதியடிக்காடு கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் கோபால்ஜி (வயது 35), நம்மங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த துக்க பிரசாத் (32) ஆகியோர் ஒரு பைக்கில் வந்துக்கொண்டு இருந்தனர். அப்போது அதேபகுதியை சேர்ந்த மாதேஷ் (25), பிரான்சிஸ் (24) ஆகியோர் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து தடைசெய்யப்பட்ட (ஹான்ஸ்) புகையிலை இருந்தா கொடு என்று கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது எங்களுக்கு அந்த பழக்கம் இல்லை என்று கோபால்ஜி மற்றும் துக்கபிரசாத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் மாதேஷ், பிரான்சிஸ் இருவரும் சேர்ந்து தாக்கிவிட்டு தப்பியுள்ளனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கோபால்ஜி புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் இருவரையும் தாக்கிய மாதேசை கைது செய்து திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் மற்றொரு வாலிபரான பிரான்சிசை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்