தொழிலாளி மீது தாக்குதல்

நிலக்கோட்டை அருகே தொழிலாளியை தாக்கிய 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;

Update: 2022-08-30 14:52 GMT

நிலக்கோட்டை அருகே உள்ள கருத்தாண்டிபட்டியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 60). கூலித்தொழிலாளி. இவர், கருத்தாண்டிபட்டியில் உள்ள விநாயகர் கோவிலில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த விஜயன், திலகம் மற்றும் 16 வயது சிறுவர்கள் 2 பேர் சேர்ந்து பன்னீர்செல்வத்திடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக தெரிகிறது.


இதில் படுகாயம் அடைந்த பன்னீர்செல்வம் சிகிச்சைக்காக, நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் மீது, நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேவியர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Tags:    

மேலும் செய்திகள்