கடனை அடைக்கபெற்றோரிடம் பணம் வாங்கி வர கூறி பெண் மீது தாக்குதல்கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு

கடனை அடைக்க பெற்றோரிடம் பணம் வாங்கி வர கூறி பெண் மீது தாக் கிய கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2023-04-23 20:04 GMT


பண்ருட்டி, 

நெல்லிக்குப்பம் அருகே உள்ள மேல்பட்டாம்பாக்கம் லட்சுமி நகரை சேர்ந்தவர் காதர் மகன் வசந்த ராஜன் (வயது 31). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வைஜெயந்திமாலா (22) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சம்பவத்தன்று வசந்த ராஜன், அவரது தந்தை காதர், தாய் ராபிரா ஆகிய 3 பேரும் தங்களது வீட்டுக் கடனை அடைக்க வைஜெயந்திமாலாவிடம் அவரது பெற்றோரிடம் ரூ.5 லட்சம் வாங்கி வரும்படி கூறியதாக தெரிகிறது.

ஆனால், வைஜெயந்திமாலா அவரது பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி தர முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வசந்த ராஜன், அவரது பெற்றோர் வைஜெயந்திமாலாவை திட்டி, தாக்கி வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டனர். இதுகுறித்து அவர் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அன்பேரில் வசந்தராஜன் உள்பட 3 பேர் மீதும் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்