பெண் மீது தாக்குதல்

புதுக்கோட்டை அருகே பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

Update: 2023-02-26 18:45 GMT

புதுக்கோட்டை அருகே உள்ள தளவாய்புரம், கல்லன்பரும்பை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 43). இவரது சகோதரி சுப்புலட்சுமி, வாகைக்குளம் திருவள்ளுவர் நகரில் குடியிருந்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டைச் சேரந்தவர் குமார். சுப்புலட்சுமி வளர்த்து வந்த மாடு, குமார் வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்தாக கூறப்படுகிறது. இதில் குமாருக்கும், சுப்புலட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குமார், அவரது மனைவி சேர்ந்து சுப்புலட்சுமியை தாக்கினார்களாம். இதில் காயம் அடைந்த சுப்புலட்சுமி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சுப்புலட்சுமியின் மாடு திடீரென இறந்து விட்டது. இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துவீரப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Tags:    

மேலும் செய்திகள்