2-வது திருமணம் செய்ததை தட்டிக்கேட்ட மனைவி மீது தாக்குதல்; கோர்ட்டு ஊழியர் கைது

2-வது திருமணம் செய்ததை தட்டிக்கேட்ட மனைவி மீது தாக்குதல்; கோர்ட்டு ஊழியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-09 19:28 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள அம்பலவார்கட்டளை மெயின் ரோட்டு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் வீரன்(வயது 26). இவர் அதே பகுதியை சேர்ந்த அபிநயா(26) என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து அவர்கள் குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வீரனுக்கு அரியலூர் குடும்ப நல கோர்ட்டில் வேலை கிடைத்தது. அங்கு வேலை பார்த்த நிலையில், வேறொரு பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அந்த பெண்ணை வீரன் 2-வது திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்ததாகவும், அந்த பெண் தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் வீரன், அபிநயாவுடன் சேர்ந்து வாழாமல் அடிக்கடி வேலை இருப்பதாக கூறி ஊருக்கு செல்லாமல், அரியலூரில் அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனை தட்டிக்கேட்ட அபிநயாவை வீரன் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அபிநயா புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி நடத்திய விசாரணையில், வீரன் 2-வது திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வீரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்