வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர் மீது தாக்குதல்வாலிபர் கைது

வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர் மீது தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.;

Update: 2022-12-24 18:45 GMT


விழுப்புரம் அருகே உள்ள ப.வில்லியனூரை சேர்ந்தவர் மணிபாலன் மகன் மணிவண்ணன் (வயது 28). இவர் கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தற்காலிக டெக்னிஷீயன் உதவியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் கெங்கராம்பாளையம் நூலகம் அருகே சிமெண்டு சாலை பணி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அந்த சிமெண்டு சாலைக்கு மணிவண்ணன், பைப்லைன் மூலம் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த சிரஞ்சீவி (34) என்பவர் அந்த சாலையின் மீது நடந்து வந்தார். அப்போது மணிவண்ணன், அவரிடம் ஏன் சிமெண்டு சாலையின் மீது நடந்து வருகிறீர்கள், இன்னும் காயவில்லையே என்று கேட்டுள்ளார். அதற்கு சிரஞ்சீவி, நான் அப்படித்தான் வருவேன் என்று கூறி மணிவண்ணனை தகாத வார்த்தையால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து மணிவண்ணன், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிரஞ்சீவியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்