பேரூராட்சி ஊழியர் மீது தாக்குதல்

தேனி அருகே பேரூராட்சி ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-05-10 19:00 GMT

தேனி அருகே பழனிசெட்டிபட்டி ஆர்.எம்.டி.சி. காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 58). இவர் வீரபாண்டி பேரூராட்சியில் குடிநீர் வினியோக குழாய்களை திறந்து விடும் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 8-ந்தேதி அவர், மாரியம்மன்கோவில்பட்டியில் குடிநீர் வினியோகம் செய்வதற்கு கேட் வால்வை திறந்து விடச் சென்றார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த கணேசன் என்பவர், மதுபோதையில் குடிநீர் வினியோகம் செய்ய விடாமல் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் ஒரு கல்லை தூக்கி வீசியதில் கேட் வால்வு சேதம் அடைந்தது. அதை தட்டிக் கேட்ட தங்கராஜையும் அவர் தாக்கினார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் தங்கராஜ் புகார் செய்தார். அதன்பேரில், கணேசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்