ஐஸ் கம்பெனி ஊழியர் மீது தாக்குதல்; வாலிபர் கைது
ஐஸ் கம்பெனி ஊழியரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் சேதுராயன்புதூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (வயது 24). இவர் தூத்துக்குடி தாளமுத்துநகர் அலங்காரத்தட்டு பகுதியில் உள்ள தனியார் ஐஸ் கம்பெனியில் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கீழ அலங்காரதட்டு பகுதியைச் சேர்ந்த சேவியர் மகன் டான் பிரைட் டின்சன் (21) என்பவர், ராஜேஷ் வேலை பார்க்கும் ஐஸ் கம்பெனிக்கு வந்து உள்ளார். அங்கு இருந்த ராஜேசிடம், மோட்டார் சைக்கிள் கேட்டாா். அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதில் ஆத்திரம் அடைந்த டான்பிரைட் டின்சன் தகராறு செய்து, இரும்பு கம்பியால் ராஜேசை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டான் பிரைட் டின்சனை கைது செய்தனர்.