காவலாளி மீது தாக்குதல்; வாலிபர் கைது

காவலாளியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-30 19:10 GMT

நாங்குநேரி பானான்குளத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 50). இவர் கங்கைகொண்டான் அருகே சிப்காட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அவர் பணியில் இருந்தபோது, அங்கு வந்த நெல்லை திருத்து பகுதியை சேர்ந்த பால்சாமி (25) மற்றும் சிலர் அவரிடம் தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து முத்துராஜ் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்சாமியை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்