தந்தை-மகன் மீது தாக்குதல்; 3 பேர் கைது
தூத்துக்குடியில் தந்தை-மகனை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் தந்தை-மகனை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தந்தை-மகன் மீது தாக்குதல்
தூத்துக்குடி தபால் தந்தி காலனியை சேர்ந்தவர் கோவில்மணி (வயது 63). இவருடைய மகன் சாமுவேல் விக்டர் (34). இவர் அதே பகுதியை சேர்ந்த மந்திரகுமார் (53) என்பவரின் மகளை கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்து உள்ளார். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் சாமுவேல் விக்டர் குடும்பத்துக்கும், மந்திரகுமார் குடும்பத்துக்கும் இடையே விரோதம் இருந்து வந்து உள்ளது.
இந்த நிலையில் மந்திரகுமார், அவரது உறவினர்களான தபால் தந்தி காலனியை சேர்ந்த கற்குவேல் (52), தூத்துக்குடி அந்தோணியார்புரத்தை சேர்ந்த ரிச்சர்ட் (38) ஆகியோருடன் சேர்ந்து கடந்த 18-ந் தேதி சாமுவேல் விக்டர் வீட்டிற்கு சென்று அங்கு இருந்த சாமுவேல் விக்டர், அவரது தந்தை கோவில்மணி ஆகியோரிடம் அவதூறாக பேசி இரும்பு கம்பி, அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
3 பேர் கைது
இதுகுறித்த புகாரின் பேரில் சாமுவேல் விக்டர் சிப்காட் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து மந்திரகுமார், கற்குவேல், ரிச்சர்ட் ஆகிய 3 பேரையும் கைது செய்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.