முதியவர் மீது தாக்குதல்
முதியவரை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை தச்சநல்லூர் அருகே உள்ள கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் மனோ (வயது 21). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன்பு செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் ராஜா (21) என்பவர், மனோவிடம் என்னை பார்த்து எப்படி முறைக்கலாம்? என்று கேட்டுள்ளார். பின்னர் ராஜா தனது உறவினர்களான அழகனேரியை சேர்ந்த சங்கர் உள்ளிட்ட சிலரை வரவழைத்து மனோவுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதைக்கண்ட அந்த பகுதியை பார்த்த சேர்ந்த ஆறுமுகம் (60) என்பவர் அவர்களை சமரசம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா மற்றும் சங்கர் உள்ளிட்டோர் சேர்ந்து ஆறுமுகத்தை கீழே தள்ளி கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.