கட்டணம் செலுத்த மறுத்து சுங்கச்சாவடி ஊழியர் மீது தாக்குதல்

கட்டணம் செலுத்த மறுத்து சுங்கச்சாவடி ஊழியர் 8 பேர் தாக்கினர்.

Update: 2023-01-03 19:27 GMT

உடையார்பாளையம்:

தாக்கினர்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள தத்தனூர் கீழவெளி பட்டியடி தெருவை சேர்ந்த சின்னத்துரையின் மகன் வெங்கடேசன்(வயது 33). இவர் மணகெதி கிராமத்தில் உள்ள சுங்கச்சாவடியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் சுங்கச்சாவடியில் பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சுங்க கட்டணம் கேட்டுள்ளார்.

ஆனால் அந்த காரில் வந்தவர்கள், சுங்க கட்டணம் செலுத்த மறுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த காரில் இருந்து இறங்கிய 8 பேர் கொண்ட கும்பல், வெங்கடேசனிடம் ஏன் காரை நிறுத்தினாய்? என்று கேட்டு, அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

8 பேர் மீது வழக்கு

இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் உடையார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அரியலூரை சேர்ந்த விஜி, கோவிந்தபுரம் நந்தகுமார், காட்டுபிரிங்கியம் முத்து மற்றும் 5 பேர் சேர்ந்து வெங்கடேசனை தாக்கியதாக தெரியவந்தது. இதையடுத்து 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்