கவுன்சிலரின் கணவர் மீது தாக்குதல்

மேல்பாடி அருகே கவுன்சிலரின் கணவர் மீது தாக்குதல்.

Update: 2023-05-25 18:32 GMT

காட்பாடி தாலுகா மேல்பாடி அடுத்த பெருமாள் குப்பம் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (55). இவரது மனைவி ஆனந்தி காட்பாடி ஊராட்சி ஒன்றிய 4-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்தநிலையில் சதாசிவம் பொன்னையிலிருந்து நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 6 பேர் சதாசிவத்தை வழிமறித்து இரும்புராடால் தாக்கியுள்ளனர். இதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார்.

இது குறித்து மேல்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த சதாவிசம் சிகிச்சை பெற்று வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்