ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்

தேவதானப்பட்டி அருகே ஆட்டோ டிரைவரை தாக்கிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-18 18:45 GMT

தேவதானப்பட்டி அருகே உள்ள எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 21). ஆட்டோ டிரைவர். தேவதானப்பட்டியை சேர்ந்தவர் வினோத். இவர்கள் இருவருக்கும் இடையே ஆட்டோவில் ஆட்களை ஏற்றுவது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சதீஷ்குமார் தேவதானப்பட்டி-வைகை அணை பிரிவில் நின்று கொண்டிருந்தார். அப்போது வினோத், அவரது நண்பர்கள் டோனி, சூர்யா உள்பட 7 பேர் அங்கு வந்தனர்.

அவர்கள் சதீஷ்குமாரிடம் தகராறு செய்து அவரை தாக்கினர். அப்போது அதை தடுக்க வந்த அவரது உறவினரான பிரதாப்பையும் தாக்கினர். இதில் படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வினோத், டோனி, சூர்யா உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்