வாலிபர் மீது தாக்குதல்; 4 பேருக்கு வலைவீச்சு

கயத்தாறு அருகே வாலிபர் மீது தாக்குதல் நடத்திய 4 பேருக்கு போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2023-01-25 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள தெற்கு மயிலோடை கிராமத்தைச் சேர்ந்த செல்லையா மகன் ராஜசேகர் (வயது 26). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்தையா மகன் அருள்ராஜ் என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் ராஜசேகர் கயத்தாறில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஊருக்கு அருகே சென்றபோது ராஜசேகரை திடீரென அருள்ராஜ் மற்றும் அவரது உறவினரான கவியரசன், ஞானப்பிரகாஷ் மகன் சீனிவாச சதீஷ், ஜெபசீலன் ஆகிய 4 பேரும் வழிமறித்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனராம். காயமடைந்த ராஜசேகர் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அருள்ராஜ் உள்ளிட்ட 4 பேரையும் தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்