பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை
விழுப்புரம் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே ரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மாலதி (வயது 31). இவருக்கும் சாலைஅகரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜகண்ணு என்பவருக்கும் கடந்த 30.3 2020 அன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின்போது மாலதியின் பெற்றோர், 20 பவுன் நகையும், ரூ.1 லட்சமும் மற்றும் சீர்வரிசை பொருட்களையும் செய்தனர். இந்நிலையில் திருமணமான 3 மாதங்கள் கழித்து போதுமான சீர்வரிசை செய்யவில்லை என்று ராஜகண்ணு, அவரது தாய் மங்கவரம், உறவினர் ராஜவள்ளி ஆகிய 3 பேரும் சேர்ந்து மாலதியை வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாலதி, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ராஜகண்ணு உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.