குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் தர்ணா போராட்டம்

Update: 2023-08-28 18:45 GMT

நாமகிரிப்பேட்டை ஒன்றியம் நாரைகிணறு ஊராட்சி நேருநகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் மற்றும் கூலிவேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேருநகரில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.

எனவே குடிநீருக்கு 2 கி.மீட்டர் தூரம் வரை நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள், நேற்று காலிக்குடங்களுடன் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து, குடிநீர் ஏற்பாடு செய்து தரக்கோரி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி, கலெக்டரிடம் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்