ஆசிய கோப்பை ஜூனியர் ஹாக்கி; மகளிர் ஹாக்கி குழுவிற்கு மனமார்ந்த பாராட்டுகள் - ஓ.பன்னீர்செல்வம்

ஆசியக் கோப்பை ஜூனியர் பெண்கள் ஹாக்கி தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

Update: 2023-06-11 16:03 GMT

சென்னை,

8-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானின் கமாமிகஹராவில் நடந்தது. இதில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா - தென்கொரியா அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கம் முதல் செலுத்தியது . இதனால் ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

ஆசியக் கோப்பை ஜூனியர் பெண்கள் ஹாக்கி தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற மகளிர் அணிக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

ஜப்பானில் நடைபெற்ற ஹாக்கி இறுதிப் போட்டியில் தென் கொரியாவை வீழ்த்தி ஆசிய கோப்பையை வென்ற இந்திய இளநிலை மகளிர் ஹாக்கி குழுவிற்கு எனது மனமார்ந்த பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி இளம் ஹாக்கி விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்