அசுபதி நட்சத்திர சிறப்பு வழிபாடு
சாத்தனூர் திருமூலர் கோவிலில் அசுபதி நட்சத்திர சிறப்பு வழிபாடு நடந்தது.
திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே திருமூலர் அவதரித்த சாத்தனூரில் திருமூலருக்கென தனி கோவில் உள்ளது. இங்கு ஆனி மாத அசுபதி நட்சத்திர மகாபிஷேக கூட்டு வழிபாடு நடைபெற்றது. மஞ்சள், திரவியம், தேன், பஞ்சாமிர்தம், பால் உள்ளிட்ட 16 வகையான வாசனாதி திரவியங்களை கொண்டு மகாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனையும், கூட்டு வழிபாடும் நடந்தது. ஆடுதுறை பாரதியார் இலக்கிய கழகம் சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் சூரியனார் கோவில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டார். சிங்கப்பூர் கல்லூரி முன்னாள் பேராசிரியர் எம்.எஸ். லட்சுமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பொறுப்பாளர் சந்திரசேகரன் மற்றும் திருமூலர் வழிபாட்டு குழுவினர் கிராம மக்கள் செய்திருந்தனர்.