ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குளித்தலை அருகே உள்ள மணத்தட்டை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 27). இவரது ஆட்டோவில் தெற்கு மணத்தட்டை பகுதியை சேர்ந்த சேது, சிபி ஆகியோர் நேற்று முன்தினம் ஏறிசென்றதாக கூறப்படுகிறது. இந்த ஆட்டோ கண்டியூர் பகுதிக்கு சென்றபோது ஆட்டோவில் வந்ததற்காக 2 பேரிடமும், கார்த்திகேயன் பணம் கேட்டுள்ளார். அப்போது 2 பேரும் பணம் தர மறுத்து கார்த்திகேயனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், சேது, சிபி ஆகியோர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.