காய்கறிகளை பயிரிட்டு அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்
காய்கறிகளை பயிரிட்டு அரசு பள்ளி மாணவர்கள் அசத்தினர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சோழன்குடிக்காடு அரசு உயர்நிலை பள்ளியில் ஆண்டுதோறும் தமிழக அரசின் வழிகாட்டுதலோடு மூலிகை தோட்டம் மற்றும் காய்கறி தோட்டம் அமைப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு காய்கறி தோட்டம் ஆசிரியர்களின் உதவியோடு மாணவ-மாணவிகள் பங்களிப்போடு காய்கறி தோட்டம் உருவாக்கப்பட்டது. இதில் சிறப்பு என்னவென்றால் முழுவதும் இயற்கை உரங்களை மட்டுமே வைத்து உருவாக்கப்பட்ட காய்கறி தோட்டத்தில் வெண்டைக்காய் கொத்தவரங்காய், கத்தரி, மிளகாய், தக்காளி, புடலங்காய், சுரக்காய், முருங்கைக்காய் ஆகிய காய்கறி வகைகளும், கீரை வகைகள், வாழை, மூலிகை செடிகள் அனைத்தையும் பயிரிட்டுள்ளனர்.